நேற்று (20) இரவு அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் வைத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸ் அறிவித்துள்ளது.