பொலன்னறுவைக்கும் மானம்பிட்டிக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை இன்று (21) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவைக்கும் மானம்பிட்டியவுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வீதியில் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக, பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிக்கு இடையிலான புகையிரத சேவை கடந்த 19ஆம் திகதி முதல் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீர் வடிந்தோடியதையடுத்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வீதியை இன்று காலை முதல் வாகன போக்குவரத்துக்காக பொலிஸார் திறந்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து, பொலன்னறுவை – மானம்பிட்டிய ரயில் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.