follow the truth

follow the truth

January, 21, 2025
HomeTOP1அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசிடமிருந்து வாகனம்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசிடமிருந்து வாகனம்

Published on

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பபேருக்கும் வாகனம் வழங்க எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இனிமேல் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றிரவு (20) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நேர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது கருத்து வெளியிட்டார்.

கேள்வி – பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன பேர்மிட் இனை நிறுத்தியது ஜனாதிபதி கோட்டாபய?

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அது இடைநிறுத்தப்பட்டது. அதுவும் தற்காலிகமாகத்தான் இடைநிறுத்தப்பட்டது. நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். கொள்கை அடிப்படையில் இவைகளை செய்வோம்.. நாடாளுமன்ற அனைத்து எம்பிக்களுக்கும், அதவாது அரச தரப்பு எம்பிக்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லை.. எல்லா எம்பிக்களுக்கும் அவர்களது கடமைகளை செய்வதற்கு வாகனம் ஒன்று அரசினால் வழங்கப்படும். அதனை உபயோகிக்கும் முறையினையும் நாம் மாற்றவுள்ளோம். அனைவருக்கும் சமமாகவே வழங்கவுள்ளோம். வாகன பேர்மிட் இரத்து செய்யப்படும் என தேர்தல் காலங்களில் நாம் பொதுமக்களுக்கு உறுதியளித்திருந்தோம். எந்தவொரு எம்பிக்கும் வாகன பேர்மிட் வழங்கி டியூட்டி ப்ரீ இனால் வாகனங்களை பெற்று விற்க இடமளிக்க மாட்டோம். கடமைகளை செய்வதற்கு எம்பிக்கு, அமைச்சர்களுக்கு வாகனம் ஒன்று தேவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். விருப்பம் என்றால் பேரூந்தில் கூட வரலாம்.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர்களுக்கு வாகனங்களை வழங்க மாட்டோம் என நாம் எங்கும் கூறவில்லை, கூறப்போவதும் இல்லை..”

கேள்வி – கொள்கையாக சொன்னீர்களா? 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் தருவோம் என்று சொன்னீர்களா? புது கார்கள் தருவார்கள் என்று சொன்னது ஞாபகம் இல்லையே?

“பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வழங்குமாயின் எல்லோருக்கும் ஒரே மாதிரி தர வாகனங்களை வழங்க வேண்டும்.. ஒரே தரத்தில் கொடுக்கவும் வேண்டும். இல்லையென்றால் இன்னொரு பிரச்சினை வரும்.. நாங்கள் மிகத் தெளிவாக கூறியுள்ள கொள்கை, குறிப்பிட்ட வாகனம் 5 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. 5 வருடங்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனத்தினை வருடங்கள் பூர்த்தியாகும் போது அரசுக்கு வழங்க வேண்டும் அல்லது அந்த வாகனத்தின் பெறுமதியினை அரசுக்கு வழங்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலன்னறுவை மானம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

பொலன்னறுவைக்கும் மானம்பிட்டிக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை இன்று (21) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூன்...

IMF உடன்படிக்கையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என...