நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று முதல் நாளை மாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
பதுளை – பாததும்பர,பன்வில, மெததும்பர
குருணாகல் – ரிதிகம
மாத்தளை – லக்கலை, பல்லேகம, நாவுல, பல்லேபொல
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
கண்டி – உடுதும்பர, தொலுவ
மாத்தளை – இரத்தோட்டை, வில்கமுவ , யட்டவத்தை, உக்குவளை