முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி வாகனத்தை ஒன்று சேர்த்ததோடு, அதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.