கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமைப்போல இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து இயக்குநர்களுக்கு இடம்பெற்ற பரீட்சை காரணமாக, கடந்த 17 ஆம் திகதி முதல் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இருப்பினும், நேற்று பிற்பகல் எவ்வித ரயில்வே சேவையும் இரத்து செய்யப்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.