follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP2டிரம்ப் உறுதி அளித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயலில்..

டிரம்ப் உறுதி அளித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயலில்..

Published on

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இயற்றினார்.

அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் நேற்று [ஜனவரி 19] முதல் தடை அமுலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது.

அமெரிக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அளித்துள்ள உறுதியைத் தொடர்ந்து மிண்டும் சேவையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பை கொண்டு வாருங்கள்..

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்பை தயாரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு...

சுஜீவ சேனசிங்கவுக்கு நீதிமன்ற உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்...

“சந்தையில் சிவப்பு கச்சா அரிசி தட்டுப்பாடு தொடர்பிலும் தமக்கு எவ்வித முறைப்பாடும் வரவில்லை”

சந்தையில் அரிசியின் விலை உயர்வும், சந்தையில் சிவப்பு கச்சா அரிசி தட்டுப்பாடு தொடர்பிலும் தமக்கு எவ்வித முறைப்பாடும் வரவில்லை...