follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP1அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

Published on

அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு வீடாகச் சென்று இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை 3.4 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றது, அதில் சுமார் 1.8 மில்லியன் பேர் அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற தகுதியானவர்களாக தெரிவாகினர்.

இருப்பினும், நலன்புரி நன்மைகள் சபை தற்போது 1.72 மில்லியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷ CID இல் வாக்குமூலம் வழங்கத் தயார் என நீதிமன்றுக்கு அறிவிப்பு

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க...

ரயில் சேவைகள் வழமைக்கு

கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமைப்போல இயங்கும் என ரயில்வே திணைக்களம்...

இலஞ்சம் வாங்கிய அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிள்ளையினை முதலாம் வருடத்திற்கு சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூடைகளுக்கு 18,520 ரூபா லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது...