follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP1அறுகம்பே தாக்குதலுக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் கூட்டு

அறுகம்பே தாக்குதலுக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் கூட்டு

Published on

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கியுள்ள அருகம்பேயின் சுற்றுலாப் பகுதியை இலக்கு வைத்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு பல வருடங்களாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்த புலிகள் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் இணைந்து அறுகம்பே சுற்றுலாப் பிரதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர்களில் மூவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் இணைந்து அறுகம்பேயில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது கடந்த அக்டோபர் 19ஆம் திகதி முதல் இந்தக் கைதுகள் இடம்பெற்றிருந்தன.

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

கல்கிஸை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட...

நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலனை

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர்...