follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP1உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை

உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை

Published on

உலகப் புகழ்பெற்ற பிபிசி செய்தி சேவையால் இந்த ஆண்டு உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களை வரிசைப்படுத்தி வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கை முதல் 10 இடங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு மற்றும் உலக சுற்றுலா பேரவை உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அதிகாரிகளின் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பி.பி.சி நிறுவனம் இந்த புதிய அறிக்கையை வௌியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 9ஆவது இடத்தில் உள்ளதுடன், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே தெற்காசிய நாடாக இலங்கை காணப்படுகிறது.

தரவரிசையில் டொமினிகன் குடியரசு முதலிடத்திலும், ஜப்பானிய தீவான நவோஷிமா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இத்தாலியில் உள்ள டோலமைட் மலைகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

பிபிசி செய்தி சேவை இவ்வாறு சுற்றுலா செல்ல சிறந்த 25 இடங்களை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கிஸை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட...

அறுகம்பே தாக்குதலுக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் கூட்டு

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கியுள்ள அருகம்பேயின் சுற்றுலாப் பகுதியை இலக்கு வைத்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு...

நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலனை

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர்...