follow the truth

follow the truth

January, 18, 2025
HomeTOP2சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Published on

கடந்த வியாழக்கிழமை(16) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு இருந்த நான்கு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக, மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு துப்பாக்கி தாரிகளின் தேற்றத்திற்கு சமமான இரண்டு படங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மன்னார் பொலிஸ் நிலையத்தின் 071 859 1363 அல்லது 023 222 3224 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹோட்டல் அறையொன்று உடைந்து விழுந்ததில் 06 மாணவர்கள் காயம்

கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று(18) உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 10...

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம்...

புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும்...