முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் 03 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.