follow the truth

follow the truth

January, 18, 2025
Homeலைஃப்ஸ்டைல்வேலை செய்வதுபோல் நடிக்க சீனர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக்

வேலை செய்வதுபோல் நடிக்க சீனர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக்

Published on

சீனாவில் வேலையின்மையை மறைக்க அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து சும்மா இருக்கும் போக்கு டிரெண்டாகி வருகிறது.

பல பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன. இதனால் வேலை இல்லை என்று சொன்னால் சமூகத்தில் கௌரவக் குறைச்சல், குடும்பத்தில் குறையும் மதிப்பு உள்ளிட்டவை குறித்து பயப்படுபவர்கள் இந்த யுக்தியை கண்டறிந்துள்ளனர்.

அதிகரித்து வரும் வேலையின்மைக்கு மத்தியில் வேலை செய்வதுபோல் நடிக்கும் இந்த முறையை பலர் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 30 யுவான் [சுமார் 350 ரூபாய்] தினசரி வாடகைக்கு இதற்கென்றே அலுவலகம் போன்ற அறைகள் செயல்பட்டு வருகின்றன.

தினமும் 30 யுவான் கட்டி, காலை முதல் மாலை வரை இங்கு இருந்துவிட்டு, வேலைக்கு சென்று வந்ததுபோல் பலர் பாவலா செய்து வருகின்றனர்.

வடக்கு சீனாவின் ஹெப்பி [Hebei] மாகாணத்தில் இதுபோன்ற ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.29.9 யுவான் கட்டி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு இருக்கலாம். மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.

மற்றொரு வைரல் பதிவில், குடும்பத்தினருக்கு அனுப்ப, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து “பாஸ்” போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான் வசூலிக்கப்படுவதாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் ஆபத்து

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைவராலும் காலையில் நேரமே எழுந்திருக்க முடியாது. இதனால் காலையில் தலைக்கு குளிப்பது என்பது...

உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க...

பழையன கழிதலும் புதியன புகுதலும் : ரவி மோகனின் அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி அனைவரும் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனக்...