அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் தடுப்பூசி அட்டை கட்டாயப்படுத்தபடவுள்ள நிலையில் அது தொடர்பான அப்பகுதி முகாமைதுவதிற்கும் அது பற்றிய பொறுப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கான சட்ட அனுமதி பெறப்பட்ட பின்னரே குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திகொண்டவர்களுக்கு App மற்றும் QR ஸ்கான் முறைக்கான ஒரு இலக்கமும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு தடுப்பூசியை பெற்றுகொள்ளாமல் இருக்க முழுமையான உரிமை உண்டு என்றாலும் அடுத்தவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த யாருக்கும் உரிமை இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே இரண்டு தடுப்பூசிகளையும் மேலதிகமாக பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுகொள்ளுமாறு அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.