இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் பிரதமர் தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. எதிர்வரும் ஞாயிற்றுகிழமை முதல் இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுமையாக கழியாத நிலையில் இஸ்ரேலிய படைகள் 80 பலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளனர்.
அதில் 20 சிறுவர்கள் 25 பெண்கள் அடங்குவதாகவும் 230 அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.