follow the truth

follow the truth

January, 16, 2025
HomeTOP242 வினாடிகளில் விற்கப்பட்ட ரயில் டிக்கெட் - 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை

42 வினாடிகளில் விற்கப்பட்ட ரயில் டிக்கெட் – 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை

Published on

மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதால், பாரியளவில் மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (15) கண்டியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து இணையவழி பயணச்சீட்டுகளையும் குறித்த குழுக்கள் வாங்கி, 2,000 ரூபா பெறுமதியான டிக்கெட்டை வெளிநாட்டினருக்கு 16,000 ரூபாவுக்கு விற்பனை செய்யும் குழுக்கள் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு இந்த மோசடிகள் நடைபெற்று வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.

அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்குவோர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தெரிவிப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை...

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு...

‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது...