follow the truth

follow the truth

January, 16, 2025
HomeTOP1இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Published on

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின் மூன்றாம் நாளுடன் இணைந்ததாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீனா டியான்யிங் இன்கோபரேசன் (CNTY- China Tianying Inc),சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம் ( China Harbour Engineering Company Ltd) , சீன தொலைத் தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட் (China Communications Construction Company Ltd),சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் (China Petrochemical Corporation-SINOPEC Group), மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம் (Metallurgical Corporation of China Ltd), சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம்(China Civil Engineering Construction Corporation),சீனா எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் (China Energy International Group Company Ltd),குவாங்சு பொதுப் போக்குவரத்து குழுமம்( The Guangzhou Public Transport Group) உட்பட பல முன்னணி சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டு அமர்வில் பங்கேற்றன.

அந்த நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை...

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு...

‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது...