வடமாகாண மீனவர் பிரதிநிதிகளும், தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கின் மீனவப் பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் அண்மையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.
மீன்பிடி பிரச்சினை தொடர்பாக எஸ். ஸ்ரீதரன் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பில் தனியான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.
இதன்படி வடக்கிலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் 07 பேர் இது தொடர்பான கலந்துரையாடலுக்காக இணையவுள்ளனர்.