follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP1கலாநிதி பட்டம் விவகாரம் - இன்று CID செல்லும் பாராளுமன்ற ஊழியர்கள்

கலாநிதி பட்டம் விவகாரம் – இன்று CID செல்லும் பாராளுமன்ற ஊழியர்கள்

Published on

பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, பாராளுமன்ற ஊழியர்கள் பலர் இன்று (15) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பாராளுமன்ற பதிவு அலுவலகத்தின் உயர் அதிகாரி உட்பட பலர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் உட்பட பலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் பாராளுமன்றத்திற்குச் சென்று அதிகாரிகள் சிலரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.

எனினும், சபை முதல்வர் காரியாலயத்தில் இருந்து வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் பதிவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக அமைச்சர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கியதோடு, அது தொடர்பாக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துறைமுக சிற்றுண்டிச்சாலை சோற்றுப் பொதியில் கரப்பான் பூச்சி – அதற்கு முன் கத்தியின் ஒரு பகுதி..

இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான்...

கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு

கிழக்கு யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் கடலில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு ஒன்றை மீனவர்கள் குழு ஒன்று...

கோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபா – பேக்கரி உரிமையாளர்கள்

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு...