follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடுஎக்ஸ்ப்ரஸ் பேர்ல் தீ விபத்தால் 473 கடல் உயிரினங்கள் பலி

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் தீ விபத்தால் 473 கடல் உயிரினங்கள் பலி

Published on

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இரசாயன திரவங்கள் கடலில் கலந்ததை அடுத்து, இதுவரை 417 கடலாமைகளும் 48 டொல்பின்களும் 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதென பிரதி சொலிசிட்டர் நாயகம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் குறித்து,
கப்பல் நிறுவனத்தின் உள்நாட்டு நிறுவனம், அதன் அதிகாரிகள் மற்றும் கெப்டன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள், பொறுப்பற்ற வகையில் அறிக்கைகளை வெளியிடுவதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன், அவ்வாறான கருத்துக்களுக்கு தமது திணைக்களம் கண்டனம் தெரிவிப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் நாயகம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஷாரா செவ்வந்தியை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற...

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 4 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 4 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும்...