follow the truth

follow the truth

January, 14, 2025
Homeலைஃப்ஸ்டைல்பழையன கழிதலும் புதியன புகுதலும் : ரவி மோகனின் அறிவிப்பு

பழையன கழிதலும் புதியன புகுதலும் : ரவி மோகனின் அறிவிப்பு

Published on

நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி அனைவரும் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி.

முதல் படத்திலேயே அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவின் வெளிப்பாடாக தன் பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார்.

இந்தப் பெயரையே அவர் தனது படங்களிலும் பொது வெளியிலும் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில், இனி தன்னை யாரும் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் எனவும் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கலாம் எனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட அவர், பழையன கழிதலும் புதியன புகுதலும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan (@jayamravi_official)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க...

ABC ஜூஸ் தினமும் குடிக்கலாமா? எடைக்குறைப்புக்கு இந்த ஜூஸ் உதவாது

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய...

தினமும் எடையை செக் பண்ணலாமா?

ஒரு மாதத்தில் இத்தனை கிலோதான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா... சிலர் ஒரே மாதத்தில்...