நீண்ட வார விடுமுறையை கருத்தில் கொண்டு இன்றைய தினத்திலிருந்து விசேட பேருந்து சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்காக சொந்த இடங்களுக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிவனொளிபாத மலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹட்டனுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.