அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மணித்தியாலத்துக்கு சுமார் 96 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், தற்போதைய காட்டுத் தீப்பரவல் நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டுத்தீப்பரவல் காரணமாக பெலிசேட்ஸ் பகுதியில் 23,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதுடன், ஈடன் பகுதியில் 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் காட்டுத்தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தீயணைப்பு குழுக்கள், காட்டுத்தீ பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.