follow the truth

follow the truth

January, 12, 2025
HomeTOP1பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு - விசாரணை ஆரம்பம்

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு – விசாரணை ஆரம்பம்

Published on

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று(11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகியுள்ளது.

இரண்டு பாடசாலை மாணவிகள் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், கடத்தல் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு...

புளி தட்டுப்பாடு – ஒரு கிலோ புளி 2000 ரூபா?

சந்தையில் புளிக்குப் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்க...

குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ்,...