follow the truth

follow the truth

January, 12, 2025
HomeTOP2குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

Published on

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் கட்டம் 2025 – 2027 ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும், இதற்காக, குறைந்த வருமானம் பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் துணை நிறுவனங்களின் அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நாடளாவிய ரீதியிலான வேலை திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்துவதற்கான திட்டம் பல துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆரம்ப கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலிருந்தும் 50 குடும்பங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு – விசாரணை ஆரம்பம்

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று(11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம்...

புளி தட்டுப்பாடு – ஒரு கிலோ புளி 2000 ரூபா?

சந்தையில் புளிக்குப் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்க...

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்...