follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுஅரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தயாராகும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தயாராகும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

Published on

யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக தற்போதைய பிரேரணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்போம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடுகிறோம். கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால், கூட்டுப் பொறுப்பில் சிக்கல் இருந்தால், அதற்கு தீர்வு காண வேண்டும்.

இது குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் தனித்தனியாக கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால், நாம் அளிக்கும் வாக்கு தீர்மானத்திற்கு எதிராகவே அமையும்.

இதேவேளை, தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடி செல்ல மாட்டோம், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க மாட்டேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடுவது என்பது இந்த வேளையில் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று என திரு பசில் ராஜபக்ச அமைச்சரவையில் மிகத் தெளிவாகத் தெரிவித்தார்.

இறக்குமதியை கட்டுப்படுத்துவதே எங்கள் முன்மொழிவு. ஆனால், இறக்குமதியை கட்டுப்படுத்தக் கூடாது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக ரொஷான் ரணசிங்க

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க...

“LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம்...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...