follow the truth

follow the truth

January, 10, 2025
Homeஉள்நாடுபுதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதரகத் தலைவர்கள் - பிரதமர் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதரகத் தலைவர்கள் – பிரதமர் சந்திப்பு

Published on

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.

வர்த்தகம், சுற்றுலா வியாபாரம் மற்றும் இரு தரப்பு உட்பட பல தரப்பு ஒத்துழைப்பின் ஏனைய பிரதான துறைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் உலகச் சந்தையில் இலங்கை தயாரிப்புகளுக்கென புதிய சந்தர்ப்பங்களை ஆய்வு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார்.

நிரந்தர பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்கென தேசிய தொழிற்துறையை அபிவிருத்தி செய்யும் அதேநேரம் முன்னேறி வரும் சந்தைகளில் பலம்வாய்ந்த இருப்பை ஸ்தாபிப்பதன் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை ஜூலையில் நிறைவு செய்ய திட்டம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலை...

இஸ்ரேல் சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பி.ஐ.பீ.ஏ எனப்படும் இஸ்ரேல் நாட்டு சனத்தொகை, குடிவரவு...

ஆசிரியர் பரீட்சை குறித்து அறிவித்தல்

ஆசிரியர் கல்லூரிகளின் இறுதி பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான...