இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக 800 முதல் 1000 வரை கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனங்களே காரணமாகும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டினார்.
கொள்கலன் அனுமதியில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை சுமார் 20% அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.