follow the truth

follow the truth

January, 10, 2025
Homeஉள்நாடுசிகை அலங்காரத்தினை மாற்றியதால் மாணவன் தற்கொலை

சிகை அலங்காரத்தினை மாற்றியதால் மாணவன் தற்கொலை

Published on

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, உல்கந்த, மெதகலகமவைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய இளைஞன் கடந்த 8ஆம் திகதி தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனை கிராமத்துப் பாடசாலையில் தாய் சேர்த்துள்ள நிலையில், தலைமுடியை ஸ்டைலாக வெட்டி இருப்பதால் அதனை ஒழுங்காக வெட்டி வருமாறு பாடசாலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இளைஞனுக்கு இந்த முடிவு பிடிக்கவில்லை, ஆனால் பாடசாலை வழங்கிய உத்தரவை புறக்கணிக்க முடியாது என்று காட்டிய தாய், முடி வெட்டுவதற்காக ஒரு சலூனுக்கு இழுத்துச் சென்றுள்ளார், இளைஞன் அதை வெறுத்துள்ளான். தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் இளைஞ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எதிரிமன்னையைச் சேர்ந்த கவீஷ லக்மால் என்ற பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இந்த இளைஞ கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இளைஞனின் தந்தை விபத்தில் இறந்துவிட்டதால், தாய் அவரை கவனித்து வருகிறார்.

இளைஞனின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

பிக்கு மாணவர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் காரணமாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக ஆணையம்...

உதயங்க வீரதுங்க 17ம் திகதி வரை விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று(10) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இன்று நள்ளிரவின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை...