follow the truth

follow the truth

January, 10, 2025
HomeTOP2நீங்கள் வாங்கும் பாஸ்மதி ஒரிஜினலா?

நீங்கள் வாங்கும் பாஸ்மதி ஒரிஜினலா?

Published on

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பாஸ்மதி அரிசிக்கு நிகரான ஒரு வகை அரிசி இலங்கைக்கு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் பாஸ்மதி அரிசி என விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாஸ்மதி அரிசியை எந்த நேரத்திலும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும், மேலும் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 300 ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்நாட்டில் 220 தொடக்கம் 250 ரூபா வரையில் விற்பனை செய்யக்கூடிய பாஸ்மதி அரிசிக்கு நிகரான அரிசி ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 65 ரூபா வரி செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இது தொடர்பில், சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொடவிடம் விசாரணை நடத்தினார்.

இலங்கைக்கு வரும் அரிசி வகைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படும் போது மாத்திரமே அவை பாஸ்மதி அரிசி அல்ல என அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சுங்கத் திணைக்களத்திற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை எனவும், இது தொடர்பான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கே உள்ளது எனவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலையம் – மாக்கும்புர இடையில் விசேட பஸ் சேவை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாக்கும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்திற்கும் இடையில் இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபையினால்...

ஒரு கோடி பேரை காப்பாற்ற.. தலைநகரை மாற்றும் ஈரான்..

ஈரான் தனது தலைநகரை டெஹ்ரானில் இருந்து மக்ரானுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு சாத்தியக்கூறு...

சிகை அலங்காரத்தினை மாற்றியதால் மாணவன் தற்கொலை

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, உல்கந்த, மெதகலகமவைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய இளைஞன் கடந்த 8ஆம் திகதி தூக்கிட்டு...