follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

Published on

தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தரமற்ற வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த நாட்டிற்கு கொண்டுவரப்படுவதனால், உள்நாட்டு தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிமுறைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
திறந்த பொருளாதாரத்தின் ஊடாக நாட்டிற்கு பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற பல பொருட்கள், சேவைகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் தரப்படுத்தலைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்நாட்டு தொழில்முனைவோரைப் பாதுகாக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு – இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று...