அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது.
நேற்று(08) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் வௌியிடப்பட்ட மொத்த அரிசியின் அளவு 115,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, அரிசியை இறக்குமதி செய்ய ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.