follow the truth

follow the truth

January, 10, 2025
HomeTOP1CLEAN SRI LANKA வேலைத்திட்டத்திற்கு 70 இலட்சங்கள்.. தொடக்கமே Fail.. - சாமர

CLEAN SRI LANKA வேலைத்திட்டத்திற்கு 70 இலட்சங்கள்.. தொடக்கமே Fail.. – சாமர

Published on

‘தூய்மையான இலங்கை’ (CLEAN SRI LANKA) வேலைத்திட்டத்திற்கு 70 இலட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் தான் எம்பி பதவியினை இராஜினாமா செய்யவும் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற CLEAN SRI LANKA நிகழ்ச்சியில், பாடகர் சங்கீத் விக்ரமசிங்கவுக்கு 2 இலட்சங்கள், பாடலை தயாரிக்க 8 இலட்சங்கள், இணையத்தளத்திற்கு 21 இலட்சங்கள், மொத்தமாக 70 இலட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 70 இலட்சமும் சரியான டெண்டர் முறையின் கீழ் இடம்பெறவில்லை. முடிந்தால் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிக்கையினை இப்போது முன்வையுங்கள். நான் நாடாளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்வேன்.

70 இலட்சத்திற்கு காசோலையினை எழுத முடியாது, நிதி கிளையானது திண்டாடுகின்றது. அவர்களால் எழுத முடியவில்லை, முடியாது அதுதான் உண்மையும் கூட..

அடுத்தது மொடல்ஸ்.. CLEAN SRI LANKA நிகழ்ச்சியில் உட்காரவைக்க அவர்களுக்கு 15,000 ரூபா வீதம் கொடுத்து வரவழைத்துள்ளீர்கள். முடிந்தால் இல்லை என்று கூறுங்கள்.. நான் இப்போதே பதவி விலகுகிறேன்.

ஜனாதிபதி செயலகத்தினால் 70 இலட்ச காசோலையினை இன்னும் எழுதிக் கொள்ள முடியவில்லை. ஏன்? முறையான திட்டங்கள் இன்றி கைமீறிய செலவாக உள்ளதால்.. உங்களின் பெலவத்த நிதியில் இருந்து 70 இலட்சத்தினை வழங்க வேண்டி வரும்.. கணக்காளர் அவ்வளவு தொகை எழுதமாட்டார்.. ஆரம்பிக்கப்படும் போதே வாயில் மண்.. ஆரம்பிக்கப்படும் போதே பெய்ல்… ஒரு டெண்டர் முறையை கூட சரியாக அணுகத் தெரியவில்லை..

சட்டமூலத்திற்கு எதிராக இந்தளவு தொகையினை வழங்க முடியாது, அப்படி என்றால் அது பாராளுமன்றுக்கு வந்தே ஆக வேண்டும்.. CLEAN SRI LANKA இற்கு நாலைந்துபேர் வந்து காசோலைகளை வழங்கினார்கள்.. அதல்லாது யாரும் உதவவில்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு வேண்டுகோள்

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நாளையுடன் நிறைவு

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது. நேற்று(08) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு...