ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் இன்று ரயில்வே பொது மேலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் சபையின் வருவாய் உதவியாளர் சுயாதீன தொழிற்சங்க உறுப்பினர்கள் இரத்மலானை பிரதான அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு மற்றும் சேவை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு மூன்று நாட்களுக்குள் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபடவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.