follow the truth

follow the truth

January, 9, 2025
HomeTOP1தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதன்படி, இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழு தலைவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மேற்படி விசாரணைகள் தொடர்பான சாரங்களை தயாரித்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபர் ஊடாக அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் IMF ஆட்சேபனைகள் இல்லை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர்...

இலங்கையில் HMPV தொற்று எதுவும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சர்

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை என...

ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை...