follow the truth

follow the truth

January, 9, 2025
Homeஉள்நாடு"Gem Sri Lanka - 2025" கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் வெகு விமர்சையாக ஆரம்பம்

“Gem Sri Lanka – 2025” கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் வெகு விமர்சையாக ஆரம்பம்

Published on

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(08) சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.

சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கண்காட்சி கூடங்களை பார்வையிட்டதோடு இரத்தினக்கல் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

“Gem Sri Lanka – 2025” கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குழு புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

இவ்வருட “Gem Sri Lanka – 2025” கண்காட்சியானது 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியதுடன், அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் இதில் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த மூன்று வருடங்களில் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை

இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, மற்றும் சிறந்த இலவச சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக, இந்த நாட்டில்...

புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்

உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய...

பஸ்களில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்ற 03 மாத கால அவகாசம்

பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் கால...