follow the truth

follow the truth

January, 9, 2025
Homeஉலகம்அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை

அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை

Published on

டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சமீபத்திய வாரங்களில் கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுவது குறித்துப் பலமுறை வலியுறுத்தி வருகிறார்.

“கனடா, அமெரிக்கா இரண்டும் ஒன்றிணைவது நிலைமையை மேம்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கனடாவை அமெரிக்காவின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “அதற்கு வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்ரூடோ தனது எக்ஸ் பதிவில், “பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில், எங்கள் இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களும் மக்கள் சமூகங்களும் ஒருவருக்கொருவர் பயனடைந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

இது குறித்து கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் கருத்துக்கள் கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைக் காட்டுகிறது.

நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்கள் மக்கள் வலிமையானவர்கள். அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒன்றரை இலட்சம் அரச ஊழியர்களை நீக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் ஒன்றரை இலட்சம் அரச பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே...

லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ – 30,000 பேர் வெளியேற்றம்

அமெரிக்கா - கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் வீடுகள் கருகி நாசமடைந்துள்ளதோடு,...

இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம்...