நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக பங்களாதேஷ் நீதிமன்றம், இரண்டாவது பிடியாணையை பிறப்பித்துள்ளது.
பலர் காணாமல்போன விவகாரத்தில் ஹசினாவுக்கும் தொடர்புள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹசினாவின் 15 ஆண்டு கால ஆட்சியின்போது பேரளவில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
மாணவர்கள் முன்னெடுத்த புரட்சியால் ஆட்சியை இழந்த 77 வயது ஹசினா கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் தப்பியோடினார். மனித நேயத்திற்கு எதிராகக் குற்றமிழைத்ததாகக் கூறி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதன் அடிப்படையில் அவரைக் கைதுசெய்ய ஏற்கனவே ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.