2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481 ஆகும்.
அதன்படி, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா,போலந்து, பிரான்ஸ், சீனா, நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.