பேருந்துகளில் சிவில் உடை அணிந்து சாரதிகள் மேற்கொள்ளும் குற்றங்களை கண்காணிப்பதை நிறுத்தி வீதியில் இருந்து சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தவறான பாதையில் செல்லும் சாரதிகளை அவதானித்து சட்டத்தை அமுல்படுத்தும் திறமை பொலிஸாருக்கு இருப்பதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பேருந்துகளில் இருந்து விதிமீறல் செய்யும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சாரதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், இந்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் பேருந்து மறியல் போராட்டம் கூட நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, சில சாரதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூட முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதைய நிலைமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரூந்துகளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களை அகற்றுமாறு தமது சங்கம் கூட பேரூந்து உரிமையாளர்களுக்கு அறிவித்து வருவதாகவும், கடந்த காலங்களில் துணைக்கருவிகளை பொருத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறினார்.