சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.
தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றதால் தொடரை இழக்காமல் இருக்க நாளைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் ஒரு நாள் போட்டி இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்தமாக, ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி சதவீதம் 33% மற்றும் நியூசிலாந்து அணியின் வெற்றி சதவீதம் 70% ஆகும்.
டி20 தொடரிலும் முதல் ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணியின் துடுப்பாட்ட துறையின் பலவீனமே போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
முதல் போட்டியில் விளையாடிய அதே அணியையே நாளைய போட்டியிலும் இலங்கை அணி களமிறக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்;
பெத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க, ஜனித் லியனகே, சமிந்து விக்கிரமசிங்க, வனிந்து ஹசரங்க, எஷான் மாலிங்க, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார