follow the truth

follow the truth

January, 8, 2025
HomeTOP1இடைநிறுத்தப்பட்ட பரீட்சை 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்

இடைநிறுத்தப்பட்ட பரீட்சை 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்

Published on

வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டதாக கூறப்படும் வினாத்தாள்கள் திருத்தப்படும் என அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமத்திய மாகாண அரச பாடசாலைகளில் இடம்பெற்ற 11ம் தர வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமையவே அது இடம்பெற்றுள்ளது.

வினாத்தாள்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று மாகாண கல்வி திணைக்களம் அனுராதபுரம் பொலிஸில் இரண்டு தடவைகள் முறைப்பாடு செய்திருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

தவணை பரீட்சையில் சிங்கள இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதாக தகவல் கிடைத்ததன் காரணமாகவே இவ்வாறு பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நிலைமையை கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் நடைபெறவிருந்த 11ம் தர பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சர்களின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘IMEI’ பதிவு தொடர்பில் கைப்பேசி பாவனையாளர்களுக்கு அறிவித்தல்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் கட்டாய IMEI பதிவு முறையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நெட்வொர்க்...

ஆர்பாட்டகாரர்கள் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு வளாகங்கள்...

இஸ்ரேலியர்களின் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற...