follow the truth

follow the truth

January, 8, 2025
Homeஉலகம்இந்தியாவில் 05 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி - பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

இந்தியாவில் 05 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி – பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

Published on

இந்தியாவில் முதன் முறையாக, கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளுக்கு ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் கூட்டமான இடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, சென்னையிலும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் ஏற்கனவே 3 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் உறுதியான நிலையில், சென்னையில் 2 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், மொத்த எண்ணிக்கை 5 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹசினாவுக்கு எதிராக மீண்டும் பிடியாணை

நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக பங்களாதேஷ் நீதிமன்றம், இரண்டாவது பிடியாணையை பிறப்பித்துள்ளது. பலர் காணாமல்போன விவகாரத்தில்...

ஒரே உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு.. ஒரு மகனுக்கு தாய்.. இன்னொரு மகனுக்கு தந்தை

சீனாவைச் சேர்ந்த 59 வயதான பெண், இரண்டு இனப்பெருக்க அமைப்புகளைக் கொண்டுள்ளார் . ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க...

இந்தியாவில் முதன் முறையாக புலிகளுக்கு பறவைக் காய்ச்சல் : 3 புலிகள் பலி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ...