இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் தவரவிடக்கூடும் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணித்தலைவராக பதவியேற்று நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக அவர் முழு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கத் தயாராவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான போர்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 3 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
இந்தநிலையில், நேற்றையதினம் இரண்டாவது குழந்தை பிரசவத்துக்காக தமது மனைவியை பெட் கம்மின்ஸ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமையினால் இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்டீவன் ஸ்மித் அவருக்குப் பதிலாக தலைமைப் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.