சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதன்படி சீனாவின் வடக்கு மாகாணங்களில் குறித்த வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், இதில் சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் Human Metapnemovirus எனும் HMPV வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கர்நாடகாவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கும், 3 மாத குழந்தைக்கும் HMPV தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.