இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தனிநபருக்கும் வீட்டு உரிமையை வழங்குவதாகும்.
இதன்படி, முன்னுரிமை அடிப்படையில் உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை, வசதியான வீட்டு உரிமையில்லாத கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 65,000 பேர் கொழும்பு நகர எல்லையில் வசிப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளை உள்ளடக்கி வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
அதற்காக மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.