கடந்த வருடத்தில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 41 பேர் பாதிப்புக்குள்ளானதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்பட்ட, எலிக்காய்ச்சலை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 41 பேரும் கடந்த வருடத்தின் பெரும்போகம் மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நோயெதிர்ப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக எலிக்காய்ச்சல் நோய் பரவலைத் தடுக்க முடியும் என வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவுறுத்தியுள்ளது.