கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் நைட் கண்காட்சி மற்றும் கச்சேரி தொடரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் திட்டங்களுக்காக இளைஞர் பேரவையின் நிதியை அப்போதைய இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தவறாக பயன்படுத்தியதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு இளைஞர் பேரவையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிகளுக்காகவே இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.