கொழும்பு அவிசாவளை வீதியின் போக்குவரத்து இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் விடுத்துள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம ரஜமகா விகாரையில் இடம்பெற்று வரும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி ஆசீர்வாத வருடாந்த மஹா பெரஹெர ஊர்வலம் செல்லவுள்ளதால் குறித்த வீதியில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – அவிசாவளை மார்க்கத்தில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.