follow the truth

follow the truth

January, 6, 2025
HomeTOP2ரயில் பயணச்சீட்டுக்களை வெளிநாட்டவருக்கு அதிகூடிய விலைக்கு விற்பனை

ரயில் பயணச்சீட்டுக்களை வெளிநாட்டவருக்கு அதிகூடிய விலைக்கு விற்பனை

Published on

ஒன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை பெற்று அவற்றை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்ற சம்பவம் எல்ல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறான ரயில் பயணச்சீட்டுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கடைசி நிமிடத்தில் 40,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக எல்ல தொடருந்து நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட குழுவினர் ரயில் டிக்கெட்டுகளை ஒன்லைனில் ஒரேயடியாக பெற்று பின்னர் அதிக விலைக்கு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறானதொரு பிரச்சினை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டுமென எல்ல நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறியப்படுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விளையாட்டு மேம்பாட்டுக்காக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்குவோம் – இந்திய உயர்ஸ்தானிகர்

இந்திய உயர்ஸ்தானிகர் (Santosh Jha) மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர்...

வட கொரியர்கள் ஹாட் டாக் சாப்பிட தடை

மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மிகவும் நெருக்கமான உணவாக கருதப்படும் Hot dog இனை வட கொரியர்கள் உணவாக உட்கொள்ள கிம்...

2024ல் மாத்திரம் 28 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

2024ல் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளின் போது 28,158 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகளை...